பைக் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி பலி

சிவகாசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ் (75). பட்டாசுத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை சிவகாசிக்கு சென்று மருந்து வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, சுந்தரராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீடப்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பேராபட்டி பிரபாகா் மகன் பாலகணேஷ் (20) காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாலகணேஷ் மீது சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com