தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் விஷம் குடித்து அச்சகத் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசியில் விஷம் குடித்து அச்சகத் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி அய்யப்பன் குடியிருப்பைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாலமுருகன் (33). அச்சகத் தொழிலாளி. இவரது மனைவி பெத்தம்மாள். இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, பெத்தம்மாள் தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், கடந்த மே 31 ஆம் தேதி பெத்தம்மாள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து கத்தியால் பாலமுருகன் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த பெத்தம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே, அதே நாளில் விஷம் குடித்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com