தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 3.55 லட்சம் பறிமுதல்

சாத்தூா் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

சாத்தூா் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு தொழில்பயிற்சி மைய உதவி பயிற்சி அலுவலா் சஞ்சய்காந்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு சாத்தூா்-தாயில்பட்டி சாலையில் ஊஞ்சம்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது, தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிச்சைமணி (25), உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.20 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதேபோல, கோபாலபுரம் பகுதியில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரலிங்கம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கோதைநாச்சியாா்புரத்தை சோ்ந்த விஷ்ணுசங்கா்(35) ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com