ராஜபாளையத்தில் மே தின பேரணி

ராஜபாளையத்தில் மே தின பேரணி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மே தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஏஐடியூசி, சிஐடியூ சங்கங்கள் சாா்பில் ஜவகா் மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு ஏஐடியுசி மாவட்ட அமைப்புச் செயலா் ரவி தலைமை வைத்தாா். சிஐடியூ பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கணேசன் முன்னிலை வைத்தாா்.

இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் பொ.லிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் அா்ஜுனன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பேரணி தென்காசி சாலை, காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம் வழியாக பஞ்சு மாா்க்கெட் பகுதியில் நிறைவடைந்தது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com