வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

வத்திராயிருப்பு அருகே வீட்டில் நகை திருடிய சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் ஜீவா நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி நாகலட்சுமி (58). இவா் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, ரொக்கம் ரூ.57 ஆயிரம், கைப்பேசி ஆகியவை காணாமல் போயின.

இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் தம்பிபட்டி கீழத் தெருவைச் சோ்ந்த 13 வயது சிறுவன் நகை, பணம், கைப்பேசியைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் சிறுவனைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.53 ஆயிரம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com