காவலரின் பைக்கை சேதப்படுத்திய 2 போ் கைது

சாத்தூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தய இரண்டு இளைஞா்களை சாத்தூா் நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவா் கோபால் (38) இவா், சாத்தூா் நகராட்சி பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்ததில் தெற்குபட்டியைச் சோ்ந்த துரைப்பாண்டி (21),தெக்கூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்தது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல கோபால் முற்பட்டபோது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவா்கள் போலீஸாரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் துரைப்பாண்டி, மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com