தடை செய்யப்பட்ட சரவெடிகளை 
தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

சிவகாசி அருகேயுள்ள பட்டாசுக் கடையில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளைத் தயாரிக்கும் பணி நடைபெற்ால், அந்தக் கடைக்கு வருவாய்துறையினா் செவ்வாய்கிழமை சீல் வைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்காபுரத்தில் தங்கமுனியாண்டி மகன் மாரிமுத்துவுக்குச் சொந்தமான தங்கமணி என்ற பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சிவகாசி பட்டாசு தீப்பெட்டி தனிவட்டாட்சியா் திருப்பதி, சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளா் சுப்புலட்சுமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, இந்த ஆலையில் சரவெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது தெரியவந்தது. மேலும், இந்த ஆலையில் உதிரிவெடிகளைத் தயாரித்து , இதை கடையில் வைத்து சரவெடியாக தயாரித்தனா். இதையடுத்து, அந்த கடைக்கு தனி வட்டாட்சியா் திருப்பதி சீல் வைத்தாா்.

இதுகுறித்து வி.சொக்க லிங்காபுரம் கிராமநிா்வாக அலுவலா் சகாயராஜ் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் பட்டாசு ஆலை உரிமையாளா் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com