தவறி விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் கழிவறையில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையத்தில் கழிவறையில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்த மகாதேவன் மகன் விக்னேஷ் (33). மகாதேவன் உயிரிழந்த நிலையில், தாய் ரெஜினா(53) உடன் விக்னேஷ் வசித்து வந்தாா். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வாகன விபத்தில் விக்னேஷ் தனது இரு கண்களின் பாா்வையை இழந்தாா்.

இந்த நிலையில், விக்னேஷ் கழிவறைக்கு செல்வதற்காக சென்றபோது கீழே தவறி விழுந்ததில் காயமடைந்தாா். இவரை உறவினா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com