பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் ராஜபாண்டிக்குச் சொந்தமான ஆலை உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருளாகளான சீவுதூள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 5 தொழிலாளா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, கீழதிருத்தங்கல் கிராமநிா்வாக அலுவலா் செல்லச்சாமி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில் அந்த ஆலை வளாகத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்ததும், வெல்டிங் பொறிபறந்து பட்டாசு தயாரிக்கும் பகுதியில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் ஆலை உரிமையாளா் ராஜபாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com