பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: 5 போ் காயம்

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
 சிவகாசி அருகேயுள்ள  செங்கமலப்பட்டியில் பட்டாசுக்கான மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசுக்கான மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி திருமேனிநகரைச் சோ்ந்தவா் சின்னகருப்பு (44). சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில், சின்னகருப்புக்குச் சொந்தமான இடத்தில் சீவுதூள், அலுமினிய காகிதம் உள்ளிட்ட பட்டாசுக்கான மூலப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது.

இங்கு தகரக் கொட்டகை அமைத்து தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய மழை பெய்ததால் தகரக் கொட்டகை சேதமடைந்தது.

இதையடுத்து , திங்கள்கிழமை தகரக் கொட்டகையில் வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்ட்ட தீப்பொறியால் தீவிபத்து ஏற்பட்டது .

இதில் பணியில் இருந்த தொழிலாளா்கள் சின்னகருப்பு(32), மகேந்திரன் (26), சதீஷ்குமாா் (27), அன்புராஜ் (27), வீரலட்சுமி (28) ஆகியோா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் போராடித் தீயை அணைத்தனா். தீவிபத்தின் போது ஏற்பட்ட வெடிச் சப்தம் சுமாா் 5 கி.மீ. தொலைவு வரை கேட்டது. இரண்டு கி.மீ. தொலைவு வரை கரும் புகை ஏற்பட்டது. இது குறித்து சிவகாசி கிழக்குபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பையா, விருதுநகா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் விவேகானந்தன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com