சிவகாசி அருகேயுளள ஈஞ்சாா் கிராமத்தில் வண்ண மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில்                                                                                            தீயணைப்பு படை வீரா்கள்.
சிவகாசி அருகேயுளள ஈஞ்சாா் கிராமத்தில் வண்ண மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரா்கள்.

வண்ண மத்தாப்பு ஆலையில் தீவிபத்து

சிவகாசி அருகே வண்ண மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே வண்ண மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் அபிரூபனுக்குச் சொந்தமான வண்ண மத்தாப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணியாளா்கள் மத்தாப்புக் குச்சிகளை பெட்டியில் அடைக்கும் போது உராய்தல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் உடனே ஆலையை விட்டு வெளியேறினா். இதனால் யாருக்கும் காயம் இல்லை.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com