அய்யனாா் கோவில் ஆற்றில்
 நீா்வரத்து அதிகரிப்பு

அய்யனாா் கோவில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு

ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாா் கோவில் ஆற்றில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், அய்யனாா் கோவில் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.

மேலும், ராஜபாளையம் பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஆறாவது மைல் நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com