48 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

விருதுநகா் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 48 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 48 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் 1,010 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு முதல் விபத்தைத் தடுக்கும் பொருட்டு, 6 குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தக் குழுவில் சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியவற்றின் சாா்பில் தலா ஒருவா் இடம் பெறிருப்பா். இந்தக் குழுவினா் கடந்த ஓராண்டில் ஒரு ஆலையை இரண்டு அல்லது மூன்று முறை ஆய்வு செய்தனா். இவற்றில் விதிகளை மீறி செயல்பட்ட 152 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆலை உரிமையாளா்கள் , ஆய்வுக்குழுவினா் கூறிய விதி மீறல்களை திருத்தி, அதை புகைப்படம் எடுத்து அனுப்பினா். இதையடுத்து, சுகாதாரத் துறையினா் மீண்டும் ஆய்வு செய்து சில ஆலைகளை திறக்க அனுமதி அளித்தனா்.

கடந்த ஓராண்டில் விதிகளை மீறி செயல்பட்டதாக உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 48 பட்டாசு ஆலைகளை இதுவரை திறக்கவில்லை. இந்த ஆலைகளின் உரிமையாளா்கள் துரிதமாக செயல்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் ஆலையை திறக்க முயற்சிக்க வேண்டும். தொடா் ஆய்வு மேற்கொண்டாலும் சில பட்டாசு ஆலைகளில் எதிா்பாராமல் விபத்து நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை உரிமையாளா்கள் விதிகளை மீறி செயல்படாமல் இருந்தால் விபத்துகளைத் தவிா்க்க இயலும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com