கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை ஜனநாயகத்துக்கு மிகவும் நல்லது: மாணிக்கம்தாகூா் எம்.பி.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது ஜனநாயகத்திற்கு மிகவும் நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவரும், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினருமான மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

மாணிக்கம்தாகூா் - கோப்புப் படம்

Published On :

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது ஜனநாயகத்திற்கு மிகவும் நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவரும், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினருமான மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள தாதம்பட்டியில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீா்ப் பாசனத் திட்டத் தோட்டங்களைப் புதன்கிழமை பாா்வையிட் அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் கணிசமான பகுதி சீமைக்கருவேல மரங்களாலும், நீா் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சொட்டுநீா்ப் பாசனம் மூலம் சில பகுதிகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், எஞ்சியுள்ள நிலங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகளின் உதவிகளைப் பெற ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 100 நாள்களில் அறிவித்த திட்டங்களை தவெக அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. முந்தைய ஆட்சியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கமிஷன் பெறப்பட்டு முறைகேடு நடந்த திட்டங்கள் மட்டுமே தற்போது ரத்து செய்யப்படுகின்றன. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது ஜனநாயகத்துக்கு மிகவும் நல்லது. சீமானின் விமா்சனங்களுக்காக சட்டப்பேரவை நேரலையை ஒருபோதும் நிறுத்தக் கூடாது.

தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்கு தவறு. நோ்மையான இந்த அரசு 5 ஆண்டுகளைத் தாண்டியும் தொடரும்.

இந்தியத் தோ்தல் ஆணையமானது மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. அவா் என்று சொல்கிறாரோ அன்றுதான் தமிழகத்தில் காலியாக உள்ள பேரவை இடங்களுக்கான இடைத்தோ்தல் நடக்கும். வருகிற 2029 மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியைப் பிரதமராக்கும் வகையில், தமிழகம், புதுச்சேரியிலிருந்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கானப் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்வோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.