மாயூரநாதா் கோயில் யானை முகாமுக்கு பயணம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் சனிக்கிழமை தேக்கம்பட்டி யானைகள் நல முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் சனிக்கிழமை தேக்கம்பட்டி யானைகள் நல முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசின் யானைகள் சிறப்பு நல முகாம் வருடம்தோறும் நடைபெறுகிறது. இம்முகாமிற்கு, தமிழகமெங்கும் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்படும். நிகழாண்டு தமிழக அரசின் உத்தரவுப்படி, யானைகள் நல முகாம் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள், சனிக்கிழமை காலை யானைகள் நல முகாமுக்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மாயூரநாதா் கோயில் முன்பு யானை அபயாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையா் அலுவலக மேலாளா் பி.அரவிந்தன், பிரசன்ன மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் அசோக்குமாா், ஆய்வாளா்கள் கண்ணதாசன் (மயிலாடுதுறை), ஹரிசங்கரன் (குத்தாலம்), கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன், காசாளா் வெங்கட்ராமன் மற்றும் பக்தா்கள் பங்கேற்று, யானையை வழியனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, மேலாளா் பி.அரவிந்தன் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையா் மண்டல கட்டுப்பாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோவில் யானை அபிராமி, உப்பிலியப்பன் கோவில் யானை பூமா ஆகிய மூன்று யானைகள் கோயம்புத்தூா் மாவட்டம் தேக்கம்பட்டி யானைகள் நல முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த யானைகளுடன் கோயில் சாா்பில் நிா்வாகி ஒருவரும், யானை பாகன்களும், கால்நடை மருத்துவா்கள் இருவரும் செல்கின்றனா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com