சுடச்சுட

    


    சீர்காழி நகராட்சி அனைத்து நிலை ஊழியர்கள், பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கி, அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
    சிதம்பரம் பிரதான சாலையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாப்பிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை சமன்செய்து வந்ததுடன், குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கும் பயன்பட்டுவந்தது.  குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வெளியேறும் வகையிலும், குளத்தில் தண்ணீர் குறைந்தால் அதே வாய்க்கால் வழியாக குளத்தை நிரப்பும் வகையிலும் நீர்வழிப்பாதை இருந்தது. நாளடைவில் அரியாப்பிள்ளை குளம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் அதன் பொழிவை இழந்து வறண்டு, செடி, கொடிகள் காடுகள் போல் முளைத்து காணப்பட்டன.
    இந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் இக்குளத்தை தூர்வாரும் பணி  நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமையில் தொடங்கியது. இதில், நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன்மற்றும் பணியாளர்கள், துப்புரவப் பணியாளர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai