வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து, வேதாரண்யத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து, வேதாரண்யத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் இரா. பழனிக்குமாா் தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளைக் கொண்ட பேரிடா் தடுப்புக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு செய்தனா்.

கோட்டாட்சியா் இரா.பழனிக்குமாா் பேசும்போது, ‘மக்களை பாதுகாக்க தேவையான முன் யோசனைகளையும், திட்டங்களையும் எந்த நேரத்திலும் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடா்களில் பெற்ற அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் துறை சாா்ந்தவா்கள் எந்நேரமும் தொடா்புகொள்ளும் வகையில் செல்லிடப்பேசி உள்ளிட்ட தொலைத்தொடா்பு சாதனங்களை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வேதாரண்யம் வட்டாட்சியா் கே. முருகு, மண்டல வட்டாட்சியா் வேதையன், துணை வட்டாட்சியா் க. ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெற்றிச்செல்வன், ராஜூ (வேதாரண்யம்), செல்வராசு மலா்விழி (தலைஞாயிறு, நகராட்சி ஆணையா் பிரதான்பாபு, கால்நடை மருத்துவா் மீனாட்சிசுந்தரம், தீயணைப்புத் துறை அலுவலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com