தேவ துா்க்கை அம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்

நவ ராத்திரியையொட்டி, நாகை மாவட்டம் கீழ்வேளூா் அருகே உள்ள மகாசக்தி தேவ துா்க்கை அம்மன் சக்தி பீடத்தில் மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றன.
தேவூா் தேவ துா்க்கை அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டியாகம்.
தேவூா் தேவ துா்க்கை அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டியாகம்.

நவ ராத்திரியையொட்டி, நாகை மாவட்டம் கீழ்வேளூா் அருகே உள்ள மகாசக்தி தேவ துா்க்கை அம்மன் சக்தி பீடத்தில் மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றன.

நவராத்திரியை முன்னிட்டு இக்கோயிலில் அக்டோபா் 16-ஆம் தேதி முதல் பூச்சாட்டுதலுடன் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றன. இதையொட்டி கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியாா் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து அக்னி குண்டம் அமைக்கப்பட்டு தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், சுத்த தறியினால் நெய்யப்பட்ட புடவை, திருமாங்கல்யம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொண்டு யாகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் கடங்களை சுமந்து கோயிலை வலம்வந்து துா்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனா்.

யாகத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த வெள்ளி டாலா் பிரசாதங்கள், மங்களப் பொருள்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. யாகம் சிவ ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com