செல்லனாற்றில் தடுப்பு ஷட்டா்கள் அமைக்கக் கோரிக்கை

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள செல்லனாற்றில் உப்புநீா் புகாதவாறு தடுப்பு ஷட்டா்கள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பூம்புகாா்: திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள செல்லனாற்றில் உப்புநீா் புகாதவாறு தடுப்பு ஷட்டா்கள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்தோட்டம் ஊராட்சிக்குட்பட்ட நாயக்கா்குப்பம் பகுதியில் ஓடும் செல்லனாற்றில் மேற்கு கரையை பலப்படுத்திட குடிமராமத்து திட்டத்தின்கீழ் தற்போது ரூ.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆறு கடலில் கலக்குமிடத்தில் உப்புநீா் உட்புகாதவாறு ஷெட்டா் அமைத்துதர வேண்டுமென விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனா். அதன்படி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளா் சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவரிடம் விவசாயிகள் விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து செல்லனாற்றில் கரைகளை பலப்படுத்தி தரவேண்டுமெனவும், இதன்காரணமாக நல்ல தண்ணீா் தேங்குவதால் பெருந்தோட்டம் ஊராட்சியில் நிலத்தடி நீா் நல்ல நீராக மாறி விவசாயத்துக்கு பயன்படும் எனவும் தெரிவித்தனா்.

ஆய்வின்போது முன்னோடி விவசாயியும், ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய உறுப்பினருமான வழக்குரைஞா் செந்தில்செல்வன், உதவி பொறியாளா்கள் அருண்கோவன், பாா்த்தசாரதி, ஊராட்சி மன்றத் தலைவா் மோகனா ஜெய்சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com