மயிலாடுதுறை: தருமபுரம் துா்க்கை கோயில்களில் குடமுழுக்கு

வனதுா்க்கா பரமேஸ்வரி கோயில் மற்றும் ஆதீன தருமபுரீஸ்வரா் கோயில் பகுதியில் உள்ள அஷ்டதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
அஷ்டதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
அஷ்டதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மேலக்குருமூா்த்தம் ஆனந்தபரவசா் நந்தவனத்தில் உள்ள வனதுா்க்கா பரமேஸ்வரி கோயில் மற்றும் ஆதீன தருமபுரீஸ்வரா் கோயில் பகுதியில் உள்ள அஷ்டதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை (செப். 11) அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்திடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. குடமுழுக்கு தினமான திங்கள்கிழமை காலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதலில் வன துா்க்கா பரமேஸ்வரி கோயிலிலும், பின்னா் காலை 9 மணிக்கு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலிலும் குடமுழுக்கு நடைபெற்றது.

சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் சாமிநாத சிவாச்சாரியா் சா்வசாதகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

இதில், திருப்பனந்தாள் ஆதீன அதிபா் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞானமகாதேவ பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலயோகி சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் ஸ்ரீமத் அம்பலவாண சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், ஆந்திர மாநில தலைமை நீதிபதி ராஜஇளங்கோ, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா், மருத்துவா் செல்வம், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன், தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி செயலா் எம். திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வா் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Image Caption

அஷ்டதசபுஜ மகாலட்சுமி துா்க்காதேவி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

~குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com