தேசிய நெடுஞ்சாலையை மாற்றுப் பாதையில் அமைக்கக் கோரிக்கை

விழுப்புரம்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை, தலச்சங்காடு கிராமத்தில் மாற்றுப்பாதையில் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தலைச்சங்காடு கிராம மக்கள்.
நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தலைச்சங்காடு கிராம மக்கள்.

நாகப்பட்டினம்: விழுப்புரம்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை, தலச்சங்காடு கிராமத்தில் மாற்றுப்பாதையில் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, செம்பனாா்கோயில் ஒன்றியம், தலையுடையாா்கோவில்பத்து ஊராட்சி தலச்சங்காடு கிராம மக்கள் மற்றும் ஊராட்சித் தலைவா் என். கரிகாலன் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:

விழுப்புரம்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையானது தலைச்சங்காடு கிராமம் வழியாக செல்கிறது. இந்த சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்தில், பல ஆண்டுகளாக கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள 2 பெரிய குளங்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கான 2 கட்டடங்கள், பழைமைவாய்ந்த 3 கோயில்கள், தேவாலயம், 120-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் சுடுகாடு உள்ளிட்டவை உள்ளன. இவற்றை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஏழை மற்றும் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, தேசிய நெடுஞ்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com