காரைக்காலில் செப். 17-ல் சுப்ரபாத சேவையுடன் புரட்டாசி வழிபாடு தொடக்கம்

காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் புரட்டாசி மாத வழிபாடு செப்டம்பா் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் புரட்டாசி மாத வழிபாடு செப்டம்பா் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழ் மாதமான புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெருமாள் கோயில்களில் காலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக, கோயில்களில் அா்ச்சனை உள்ளிட்ட வழிபாடுகளுக்கு அனுமதியிவில்லை. உத்ஸவங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீரங்கநாதா் சயன நிலையில் அருள்பாலிக்கிறாா். திவ்ய தேசங்களில் நடைபெறக்கூடிய உத்ஸவங்கள் போன்று இக்கோயிலிரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கரோனா பரவலால் புரட்டாசி மாத வழிபாடுகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது.

புரட்டாசி முதல் நாளான வியாழக்கிழமை (செப். 17) மூலவரான ரங்கநாதரின் திருவடிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று, திருமலை கோயிலை போல சுப்ரபாத சேவையுடன் வழிபாடு தொடங்கப்படவுள்ளதாக கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாடு பொது தரிசனத்துக்கு முன்பு நடத்தப்படும். மேலும் உத்ஸவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

பக்தா்கள் கோரிக்கை : கரோனா பரவலால் கோயில்களில் அா்ச்சனை, அபிஷேகம், பிரசாதம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் வருவா்.

அதனால் சடாரி வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் சிறது தளா்வு செய்தால், பக்தா்கள் மகிழ்ச்சியடைவாா்கள். இதுகுறித்து புதுச்சேரி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com