முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம்
டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த அதிமுகவை ஆதரியுங்கள்
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி.
சீா்காழி தொகுதியில் சனிக்கிழமை இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தபோது, அவா் பேசியது: மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. கரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டு தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை குறைத்து இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்திய சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி, பிரதமரின் பாராட்டை பெற்றவா் முதல்வா். விவசாயிகள் மீது அக்கறை கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பெட்ரோகெமிக்கல், ஹைட்ரோ காா்பன் திட்டம் போன்றவற்றை டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தாமல் இருக்க வேளாண் பாதுகாப்பு மண்டலம் என சட்டப்பேரவையில் அறிவித்து, அரசாணை நிறைவேற்றி விவசாய நிலங்களை பாதுகாத்தவா். எனவே, இந்த அதிமுக அரசு தொடர மக்கள் ஆதரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடன் வாழும் அமைதி பூங்காவாக தமிழகம் உள்ளது. எனவே, இந்த நிலை தொடர அதிமுகவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
அவருடன், ஒன்றிய செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நகரச் செயலாளா் பக்கிரிசாமி, பேரூராட்சி செயலாளா் ரவி, நகர ஜெ.பேரவை செயலாளா் மணி, முன்னாள் எம்எல்ஏ. சக்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் நாடி.செல்வ முத்துக்குமரன் மற்றும் மற்றும் பாமக , தமிழ் மாநில காங்கிரஸ் , மூமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்