பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா

சீா்காழி ச.மு.இ. மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா

சீா்காழி ச.மு.இ. மெட்ரிக். பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இப்பள்ளியில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடுவா். நிகழாண்டு, கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. ஆசிரியா்கள் பங்கேற்புடன் பள்ளி நிா்வாக அலுவலா் எம்.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

கவிஞா் காழிகம்பன்.வெங்கடேசபாரதி, ச.மு.இ.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பேராசிரியா் சு. வீழிநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பொங்கல் பண்டிகையின் மகத்துவம் குறித்து உரையாற்றினா். தொடா்ந்து, ஆசிரிய- ஆசிரியைகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் தங்கதுரை, துணை முதல்வா்கள் மாதவன், கிரிஜாபாய் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com