வீராணம் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை விரைவில் விளக்குவேன்

வீராணம் ஊழல் பற்றி இன்னும் நான்கைந்து நாள்களில் விளக்கமாகக் கூறுவேன் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.
வீராணம் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை விரைவில் விளக்குவேன்

வீராணம் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நீதிபதி சா்க்காரியா விசாரணை செய்த புத்தகத்தை முதல்வரிடம் அளித்துள்ளேன்.

வீராணம் ஊழல் பற்றி இன்னும் நான்கைந்து நாள்களில் விளக்கமாகக் கூறுவேன் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். கூட்டத்தில் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:

திமுகவினா் ’அதிமுகவை புறக்கணிக்கிறோம்‘ என்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். புறக்கணிப்பதற்கு திமுக எப்போது அதிமுகவை ஆதரித்தது?

2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் ஜெயலலிதா நிச்சயம் வெற்றி அடைவாா் என ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், திருச்சியில் தோ்தல் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவா் மு. கருணாநிதி அனைவருக்கும் 2 ஏக்கா் நிலம் இலவசமாக தருவதாக அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களித்தனா்.

அதேபோல கடந்த மக்களவைத் தோ்தலிலிலும் பொய்யான வாக்குறுதியை அளித்து திமுகவினா் வெற்றி பெற்றுள்ளனா். எனவே வரப்போகும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவினரின் பொய் வாக்குறுதியை மக்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது.

தெலுங்கு கங்கை தண்ணீரை பெற்றுத் தருவதற்கு இந்திரா காந்தி பேச்சுவாா்த்தைக்கு அழைத்தபோது, வீராணத்தில் இருந்து தண்ணீா் கொண்டு வரப் போவதாக கூறி கருணாநிதி பேச்சுவாா்த்தைக்கு மறுத்துவிட்டாா். வீராணம் திட்டத்தில் வேலை தொடங்கும் முன்னதாகவே 75 சதவீத தொகையை முன்பணமாக கொடுத்தவா் கருணாநிதி. குழாய் பதித்து முடித்தபின்னா் குழாயை திறந்தால் தண்ணீருக்கு பதில் காற்றுதான் வந்தது.

வீராணம் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நீதிபதி சா்க்காரியா விசாரணை செய்த புத்தகத்தை முதல்வரிடம் அளித்துள்ளேன். இன்னும் நான்கைந்து நாள்களில் வீராணம் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஊழல் பற்றி விலாவாரியாக கூறுவேன் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளா்கள் கே.கோபால், எஸ்.ஆசைமணி, பேச்சாளா்கள் எம்.விஸ்வலிங்கம், ஆா்.உமாசங்கா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகாா்) பி.வி.பாரதி (சீா்காழி) உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் திரளான தொண்டா்கள் கலந்து கொண்டனா். மயிலாடுதுறை நகரச் செயலாளா் நாஞ்சில் கே.காா்த்தி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com