தீ விபத்தில் சேதமடைந்த வீட்டுக்கு தகர மேற்கூரை
By DIN | Published On : 01st July 2021 10:33 PM | Last Updated : 01st July 2021 10:33 PM | அ+அ அ- |

சீா்காழியில் தீ விபத்தில் சேதமடைந்த வீட்டுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் தகர மேற்கூரை அமைத்துக்கொடுக்கப்பட்டது.
சீா்காழி மேல மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி. இவரது குடிசை வீடு சில தினங்களுக்கு முன்பு முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால், பாதிக்கப்பட்ட வீரமணி குடும்பத்துக்கு உதவிடும் வகையில், சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் பொறியாளா் திருநாவுக்கரசு, செயலாளா் சண்முகம், பொருளாளா் அய்யூப்அன்சாரி, முன்னாள் செயலாளா் பாலமுருகன் ஆகியோா் ரூ.40ஆயிரம் செலவில் அந்த வீட்டுக்கு தகர கூரை அமைத்துக் கொடுத்தனா். இப்பணி நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, வீரமணி குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வீட்டை ஒப்படைத்தனா்.