ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 01st July 2021 10:33 PM | Last Updated : 01st July 2021 10:33 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே ரயில் மோதி ஒருவா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் கோவைக்கு புறப்பட்டுச் சென்ற ஜனசதாப்தி விரைவு ரயில், குத்தாலம்-நரசிங்கம்பேட்டை இடையே சென்றபோது, இருப்புப் பாதையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்கவா் மீது மோதியது. இதில், அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.