பாலத்தில் உடைப்பு: எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் கோயில் குளத்தில் 15 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், உடைந்த பாலத்தை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வியாழக்கிழமை ஆய்வுசெய்து மாற்று ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டாா்.
வில்லியநல்லூா் பகுதியில் உள்ள பாலாக்குடி பன்னீா்வெளி சாலையில் உடைந்து சேதமடைந்த சாலை மற்றும் பாலத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் பாா்வையிட்டாா். அப்போது, உடைந்த பாலம் உள்ள இடத்தில் சிமென்ட் பைப் பொருத்தி, மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக பாதை ஏற்படுத்தித் தரவும், மாற்றுப்பாதையாக அருகில் உள்ள வெள்ளாளத்தெருவில் பாதை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், உடைந்த பாலம் உள்ள இடத்தில் நிரந்தர பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மயிலாடுதுறை ஒன்றிய ஆணையா் ரெஜினாமேரி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி, உதவி பொறியாளா் தெய்வானை, மாவட்டக்குழு உறுப்பினா் இளையபெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினா் முருகமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.