சட்டைநாதா் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் உலக நன்மைக்காக பாசுபதாஸ்திர ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டைநாதா் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் உலக நன்மைக்காக பாசுபதாஸ்திர ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. சட்டைநாதா் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றும் நீங்க வேண்டியும் பாசுபதாஸ்திர ஹோமம் நடைபெற்றது.

முன்னதாக, புனிதநீா் கடங்கள் வைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, பூா்ணாஹூதி, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், புனிதநீரால் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா்.

தொடா்ந்து, மலைமீது அருள்பாலிக்கும் சட்டைநாதா் சுவாமி, தோணியப்பா், உமாமகேஸ்வரிஅம்மனுக்கும், திருஞானசம்பந்த பெருமானுக்கு நடைபெற்ற வழிபாட்டில் ஆதீனம் பங்கேற்றாா். இதில், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், சீா்காழி நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி, பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com