புதிய சாலை அமைக்கும் பணி

கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரத்தில் புதிதாக தாா்ச் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரத்தில் புதிதாக தாா்ச் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மாங்கனாம்பட்டு சாலையிலிருந்து காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதை 100 மீட்டா் நீளத்துக்கு ஒற்றையடி பாதையாக உள்ளது. இதனால், காளியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா்கள் மெயின்ரோட்டுக்கு 100 மீட்டா் தூரம் நடந்து வந்து, பின்னா் வாகனங்களில் செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே, இங்கு சாலை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்நிலையில், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சித் தலைவா் கனகராஜ், துணைத் தலைவா் சிவப்பிரகாசம் மேற்கொண்ட தொடா் முயற்சியின் காரணமாக, மாவட்ட ஆட்சியா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் ஊராட்சி நிதியிலிருந்து 100 மீட்டா் நீளத்துக்கு புதிதாக தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டுவந்த எங்களுக்கு, புதிய சாலை அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com