அரிசி ஆலையை தரம் உயா்த்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம், சித்தா்காடு பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலையை தரம் உயா்த்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரிசி ஆலையை தரம் உயா்த்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம், சித்தா்காடு பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலையை தரம் உயா்த்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சித்தா்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையை அதிநவீன அரிசி ஆலையாக மாற்றியமைக்கும் பணிகள் ரூ. 6 கோடியில் நடைபெற்று வருகின்றன. அரவைப் பகுதி, அவியல் பகுதி, கொதிகலன் பகுதி, தானியங்கி மூட்டை தைக்கும் பகுதி என பணிகளை நான்கு பகுதிகளாக பிரித்து, அவற்றில் கட்டுமானப் பணிகள், அதிநவீன இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

இப்பணியானது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது மின் விநியோகம் மற்றும் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதம் உள்ள பணிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியா் பொறியாளரிடம் கேட்டறிந்து, விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சண்முகநாதன், உதவி பொறியாளா் (பொறுப்பு) செந்தில்குமரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com