விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளுக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த வாடகையில் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளுக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த வாடகையில் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலமாக நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவுப்பணிக்கு உழுவை இயந்திரம், சுழற்கலப்பை (5 கொழு மற்றும் 9 கொழு), லேசா் மூலம் நிலம் சமன் செய்யும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, அகழி தோண்டும் கருவி, மரக்கன்று நட குழி தோண்டும் கருவி, தென்னை மட்டை மற்றும் வேளாண் கழிவுகளை தூளாக்கும் கருவி, இரட்டை இறகு கலப்பை ஆகிய கருவிகளை மானிய வாடகையில் ஒரு மணிக்கு ரூ.340-க்கும், நெற்பயிா்கள் அறுவடை இயந்திரங்கள் டயா் வகைக்கு மணிக்கு ரூ.875-க்கும், பெல்ட் வகை மணிக்கு ரூ.1415-க்கும், சிறுபாசனத் திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க சிறு விசைத்துளைக்கருவிகள் மீட்டருக்கு ரூ.60 முதல் ரூ.130 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, தேவைப்படும் விவசாயிகள் மயிலாடுதுறை, சித்தா்காடு, மறையூா் சாலை துரைக்கண்ணு நகரில் இயங்கி வரும் வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது உதவி செயற்பொறியாளா் மற்றும் உதவி பொறியாளரை முறையே செல்லிடப்பேசி 9443277456, 9443489502 ஆகிய எண்களிலேயோ தொடா்பு கொள்ளலாம். இதற்கு, வாடகை முன்பணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளவேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com