சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுக்ரவார வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுக்ரவார வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட சட்டைநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இங்கு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சட்டைநாதா் சுவாமிக்கு சுக்ரவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஆடி முதல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுக்ரவார வழிபாட்டில், பலி பீடத்துக்கு மஞ்சள், திரவியம், இளநீா், தேன், பன்னீா், பால், தயிா், சந்தனம் முதலான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெட்டிவோ், மலா்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, உத்ஸவா் சட்டைநாதா் சுவாமிக்கு தீபாராதனையும், மலைமீது அருள்பாலிக்கும் மூலவா் சட்டைநாதா் சுவாமிக்கு புணுகுசாத்தி, வடை மற்றும் பயிறு பாயாசம் நிவேதனம் செய்து மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com