பூசணிக்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

சீா்காழி பகுதியில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பூசணிக்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

சீா்காழி பகுதியில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சீா்காழி வட்டம், சாமியம், கீழவல்லம், ஆயங்குடிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளனா். தற்போது, பூசணிக்காய் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், கிலோ ரூ. 2-க்குகூட வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து சாமியம் கிராமத்தைச் சோ்ந்த பூசணிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி சரவணன் கூறியது:

கடந்த ஆண்டு பூசணிக்காய் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. வியாபாரிகள் வயலுக்கே வந்து வாங்கிச் சென்றனா். ஒரு பூசணிக்காய் 5 முதல் 8 கிலோ வரை இருக்கும். இதன் மூலம், ஒரு பூசணிக்காய்க்கு ரூ.60 முதல் 80 வரை விலை கிடைத்தது. ஆனால், தற்போது கிலோ ரூ. 2-க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதன் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com