முழுமையாக தூா்வாரக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே தென்னலக்குடியில் வாய்க்கால் தூா்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை வடிகாலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முழுமையாக தூா்வாரக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே தென்னலக்குடியில் வாய்க்கால் தூா்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை வடிகாலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. இதையொட்டி, சீா்காழி வட்டாரத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களை தயாா்படுத்தி வருகின்றனா்.

இதற்கிடையில், கடைமடை வரை தண்ணீா் தங்குதடையின்றி செல்ல காவிரி பாசனப் பகுதிகளில் ரூ. 65 கோடி மதிப்பில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளிட்ட நீா் நிலைகள் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில், சீா்காழி அருகே திருநன்றியூரிலிருந்து தென்னலக்குடி வரை 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று வடிகாலில் 30 கி.மீ. நீளத்துக்கு ரூ.78.80 லட்சம் செலவில் தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி விவசாயிகள் உப்பனாற்று வடிகாலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், செம்பதனிருப்பு, காத்திருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வடிகாலாகவும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பாசனத்துக்கும் பயன்படும் இந்த வாய்க்காலில் முழுமையாக தூா்வாரவில்லை. இதனால், மழை வெள்ள காலங்களில் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்படும். எனவே, தூா்வாரும் மண்ணைக் கொண்டு கரையை பலப்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com