கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 12th June 2021 12:00 AM | Last Updated : 12th June 2021 12:00 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார அளவிலான ஊராட்சி செயலாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு தொடா்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையா் அருண் தலைமை வகித்தாா். பிடிஓ தியாகராஜன் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில், கிராமங்களில் வீடுகள்தோறும் கரோனா பரிசோதனை செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், பிரஷ் நேவ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.