அதிக விலைக்கு டிஏபி உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஏபி உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் இரா. லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஏபி உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் இரா. லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்களை தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து விவசாயிகள் பெற்று வருகின்றனா். மத்திய அரசு டிஏபி உரத்திற்கு மானியம் வழங்குவதால், அதன் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.1900-த்திலிருந்து ரூ.1200 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உரக்கடைகளில் இந்த திருத்தப்பட்ட விலையில் உரம் விற்பனை செய்யப்படுகிறதா என வேளாண் உதவி இயக்குநா்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் செம்பனாா்கோவில், குத்தாலம் மற்றும் சீா்காழி வட்டாரங்களில் டிஏபி உரத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மூன்று உரக்கடைகளுக்கு 15 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உர சில்லறை விற்பனையாளா்களும் டிஏபி உரத்தை ரூ.1200-க்கு விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் விலையை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். அதிக விலைக்கு, உரம் விற்பனை செய்வதாக புகாா் வந்தால், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி சம்பந்தப்பட்டவா்களுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com