முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு குளிா்சாதனப் பெட்டி
By DIN | Published On : 12th June 2021 10:44 PM | Last Updated : 12th June 2021 10:44 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை குளிா்சாதனப் பெட்டி வழங்கினாா்.
தருமபுரம் ஆதீனம் சாா்பில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி சாா்பில் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனைக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மருத்துவமனையின் தலைமை மருந்து கிடங்கு அலுவலா் முரளியிடம் இதனை வழங்கினாா். நிகழ்ச்சியில், மருந்தாளுநா் செல்வகுமாா், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், கல்லூரிக்குழு உறுப்பினா் ஆா். சிவராமன், உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமரன், திருவையாறு செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.