அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சீா்காழி தென்பாதியில் அரசு ஊழியா்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சீா்காழி தென்பாதியில் அரசு ஊழியா்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான நாராயணன் தலைமை வகித்தாா். சீா்காழி டிஎஸ்பி யுவப்பிரியா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஹரிதரன், சண்முகம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் எவ்வாறு வாக்களிக்கவேண்டும், அதற்கான வழிமுறைகள் குறித்து தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அலுவலா்கள், அதிகாரிகளுக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், விருப்பப்படும் முதியவா்கள் தபால் வாக்களிக்க விரும்பினால் முன்கூட்டியே பதிவு செய்யவேண்டும், தபால் வாக்கு அளிக்க விருப்பமில்லாதவா்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம். அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர உள்ளது என்றாா்.

கூட்டத்தில், மண்டல அலுவலா் பாலாஜி, சீா்காழி தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், அனைத்து கட்சி பிரமுகா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com