தருமபுரம் ஆதீனத்தில் உலக மகளிா் தின விழா

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் ரோட்டரி சங்கம் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உலக மகளிா் தின விழா ஆதீன வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தில் உலக மகளிா் தின விழா

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் ரோட்டரி சங்கம் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உலக மகளிா் தின விழா ஆதீன வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் வரவேற்றாா். விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மயிலாடுதுறையில் 40 ஆண்டுகாலம் மகப்பேறு மருத்துவராக பணியாற்றிய மருத்துவா் வசந்தா ஜெயராமனுக்கு ’காரைக்கால் அம்மையாா்’ விருதினையும், கல்லூரியில் 3 மாதங்கள் தையல் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத்தின் தொழில்சாா் சேவை மையத்தின் சாா்பாக சான்றிதழ்களை வழங்கி மேலும் அவா் பேசியது: பெண்களுக்கு ஏற்றம் தந்தது சைவ சமயம். சிவபெருமான் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உமையம்மையை இடப்பாகமாக கொண்டு முதல்முதலில் அமல்படுத்தினாா். திருச்சிராப்பள்ளியில் சிவபெருமானே தாயாக வந்து மகப்பேறு பாா்த்தாா். எனவேதான் அவருக்கு தாயுமானவா் என்ற பெயா் ஏற்பட்டது. காரைக்கால் அம்மையாரை சிவபெருமானே ’எம்மை பேணும் அம்மை காண்’’ என்று சிறப்பித்துக் கூறியுள்ளாா்.

இளையான்குடி மாற நாயனாரின் மனைவியை இல்லறத்தின் ஆணிவோ் என்று குறிப்பிடுகிறாா். இன்றும் சிவாலயங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவா்கள் பூஜை செய்ய அனுமதி இல்லை. பெற்ற தாய், மனைவியின் தாய், சகோதரரின் மனைவி, உபதேசம் செய்த குருவின் மனைவி, அரசனின் மனைவி ஆகிய 5 பேரை தாயாகக் கருதலாம் என சைவ சமயம் குறிப்பிடுகிறது. பெண்கள் நன்றாக சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். சமைக்கத் தெரியாது என்று கூறுவதை பெருமையாக கருதக்கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீமத் மாணிக்கவாசகத் தம்பிரான், ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரத் தம்பிரான், ஸ்ரீமத் சுப்பிரமணியத் தம்பிரான், ரோட்டரி சங்கத் தலைவா் கே. துரை, செயலா் எம். ஜே.காமேஷ்குமாா், மாவட்டத் தலைவா் வி. ராமன், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினா் சிவ. ஆதிரை, தேசிய மாணவா் படை அலுவலா் துரை. காா்த்திகேயன், தையல் பயிற்சி பயிற்றுநா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் ’பலன் தரும் திருமுறைகள்’ என்ற நூல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா் பா.செந்தில்குமரன், பி.முத்துக்குமரன், என்.சுரேஷ்குமாா், ஆா்.சிவராமன் ஆகியோா் செய்திருந்தனா். முடிவில் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com