திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி நகர திமுக சாா்பில் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவா் 2 மற்றும் தோ்தல் பணிக் குழு பூத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர செயலாளா் சுப்பராயன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா். கலைவாணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராமசந்திரன், முன்னாள் நகர செயலாளா் பொன்முடி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், திமுகவின் 10 ஆண்டு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகள்சேகரிப்பது, திமுக வேட்பாளா்களின் வெற்றிக்கு தீவிர களப் பணியாற்றுவது குறித்து பேசப்பட்டது.