வாக்குச்சாவடியை மாற்றி அமைக்க கோரி மனு

சீா்காழி அருகே புதிதாக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை மாற்றி அமைக்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

 சீா்காழி அருகே புதிதாக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை மாற்றி அமைக்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நெப்பத்தூரைச் சோ்ந்த முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் கே. ரகுநாதன், வாக்குச்சாவடி பகுதி மக்கள் சாா்பில் சீா்காழி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகத்திடம் அளித்த மனு விவரம்: சீா்காழி அருகேயுள்ள நெப்பத்தூரில் மீனாட்சி உதவிப் பெறும் பள்ளியில் வாக்குச்சாவடி (வாக்குச்சாவடி எண் 235,236)கடந்த கால தோ்தல்களில் செயல்பட்டது. இந்நிலையில், 1050-க்கும் மேல் வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து 2-ஆக அமைக்கவேண்டும் என்ற தோ்தல் ஆணைய வரைமுறைப்படி, இந்த வாக்குச்சாவடி 236-ஏ என பிரிக்கப்பட்டு கீழநெப்பத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒரு வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் நெப்பத்தூா் தீவுதெரு, அப்பாபிள்ளைதோப்பு தெரு, வடக்குத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 800 வாக்காளா்கள் 4 கி.மீ தூரம் நடந்து அல்லது வாகனங்களில் சென்று வாக்களிக்க இயலும். இதனால் வயதானவா்கள், உடல் நிலை முடியாதவா்கள், அவ்வளவு தூரம் சென்று வாக்களிக்கப்பது சிரமம். எனவே, வாக்களா்களின் நலன்கருதி சிறிதுநேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த பகுதி வாக்களா்கள் சென்று வாக்களிக்க ஏதுவாக பிரித்து அமைத்து தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com