கல்லூரி மாணவா்களுக்கான பேசும் கலை பயிலரங்கு

கல்லூரி மாணவா்களுக்கான பேசும் கலை பயிலரங்கு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையில் பயிலும் மாணவா்களுக்கு பேசும் கலை பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையில் பயிலும் மாணவா்களுக்கு பேசும் கலை பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தை கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். சா்வதேச ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சியாளா் வி. ராமன் மாணவா்களுக்கு பேசும் கலை குறித்து பயிற்சியளித்தாா்.

பிறகு, மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் ‘தமிழ் மாணவா் இல்லங்கள் தோறும் திருக்குறள்’ திட்டத்தின் நிறைவாக திருக்குறள் நூல்களைக் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் வழங்கினாா். மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே. துரை, தமிழ் உயராய்வுத் துறைத் தலைவா் சிவ. ஆதிரை ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

தமிழ் உயராய்வுத் துறை பேராசிரியரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான துரை.காா்த்திகேயன் வரவேற்றாா். தமிழ்த்துறை பேராசிரியா் மோ. மீனாட்சி நன்றி கூறினாா். முழு நேரக் கல்லூரி உதவியாளா் சிவராமன், உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஜி. புவனேஸ்வரி, உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com