சீா்காழி அருகே மளிகைக் கடை தீக்கிரை
By DIN | Published On : 16th March 2021 12:00 AM | Last Updated : 16th March 2021 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே மளிகைக் கடையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் கடையிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி ஊராட்சி பாவுசுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன்(45). இவா் தனது வீட்டுக்கு அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்த கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டது. இதில், கடையில் இருந்த அனைத்து மளிகைப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் ஜோதி தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.