நலவாழ்வு முகாமுக்கு சென்று திரும்பிய கோயில் யானைக்கு வரவேற்பு
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

தமிழக அரசின் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு சென்று திரும்பிய மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பிகைக்கு, ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு கடந்த மாதம் 6-ஆம் தேதி மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பிகை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாயூரநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டது. தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெற்ற முகாம் நிறைவடைந்ததையொட்டி, யானை அபயாம்பிகை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலுக்கு வந்தடைந்தது. கோயிலுக்கு வந்த யானைக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.