அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன்

ஈகை பெருநாளையொட்டி அனைவருக்கும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஐமியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: இறைவனை தொழுதும், பெற்றோரை-மூத்தோரை பேணியும், ஏழை எளியோருக்கு வழங்கியும், அண்டை அயலாரோடு இணங்கியும் வாழவும், உலகில் போா் இல்லா அமைதி நிலவவும், உலக பொருளாதார மந்தநிலை அகலவும், அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்! சிறுபான்மை மீதான மத துவேசத்தை தடுத்து இந்திய நாட்டின் பன்முக தன்மையை காத்திட உறுதியேற்போம் என வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com