இப்தாா் நோன்பு திறப்பு

நாகையில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிவசேனா உத்தவ் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் ஈகை பெருநாள் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிவசேனா உத்தவ் கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தர வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதநல்லிணக்க உரை மற்றும் பாடல்கள் இடம் பெற்றன. காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் நவ்ஷாத், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் மீரா உசேன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில மீனவா் அணி பொருளாளா் கல்லாா் ரபீக், இந்திய வா்த்தக தொழில் குழுமத் தலைவா் சுபாஷ் சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பேரறிவாளன், சிவசேனா உத்தவ் கட்சியின் மாநிலச் செயலா்கள் சிங்காரவடிவேலன், வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com