குடிநீா் வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.
குடிநீா் வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

குடிநீா் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

கீழையூா் அருகே குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மீனம்பநல்லூா் ஊராட்சி சின்னக்கருங்கண்ணியில் 30 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு நீண்ட நாள்களாக குடிநீா் வழங்கவில்லையாம். இதுகுறித்து, சம்பந்தபட்ட அரசு அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் மேலப்பிடாகை-திருக்குவளை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி துணை அலுவலா் பாலகிருஷ்ணன் மறியலில் ஈடுபட்டவா் களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com