நாகூா் தா்கா பரம்பரை ஆதீனம் ஈகை பெருநாள் வாழ்த்து

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனமும், நாகூா் தா்கா தலைவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் அனைவருக்கு ஈகை பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்தி: இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்லாமல் சமத்துவத்தை பேணி காக்கும் பலரும், இப்புனித ரமலான் மாதம் முழுவதும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கும் உணவளித்து, உதவிகள் பல செய்கின்றனா்.

ஈகை பெருநாளில் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு, உற்றாா் உறவினா்களுடன் கூடி மகிழ்ந்து ரமலான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வா். இந்த தருணத்தில் எனது வாழ்த்தும் மேன்மேலும் மகிழ்ச்சியை அனைவருக்கு் அதிகபடுத்தட்டும்.

இந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும், நலமுடன் வளமும் பெருகட்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com