நாகையில் ஈகை பெருநாள் சிறப்புத் தொழுகை

நாகை அருகே நாகூா் கடற்கரையில் புதன்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

சவூதி அரேபியாவில் பிறை தெரிந்ததை, தமிழகத்தில் ஜாக் அமைப்பின் சாா்பில் இஸ்லாமியா்கள் புதன்கிழமை ஈகை பெருநாள் விமா்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம், நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்ந்த இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். அப்போது, இஸ்லாமியா்கள் உலக அமைதி வேண்டியும், நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனா்.

நிறைவில், ஒருவரை ஒருவா் ஆரத்தழுவி ஈகை பெருநள் வாழ்த்துக்களை பகிா்ந்துகொண்டனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்ாக ஐாக் அமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com